கடலில் மூழ்கிய மனைவியை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த கணவன்

Report Print Peterson Peterson in கனடா
0Shares
0Shares
lankasri.com

கனடா நாட்டில் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்ட மனைவியை காப்பாற்றிவிட்டு கணவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நோவோ ஸ்கோசியா மாகாணத்தில் உள்ள Cape Breton நகரில் தான் இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதே மாகாணத்தில் உள்ள சிட்னி நகரை சேர்ந்த Greg MacDonald(59) என்பவர் தனது 64 வயதான மனைவியுடன் Port Hood கடற்கரைக்கு சென்றுள்ளார்.

கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் மனைவியுடன் கடற்கரையில் நடந்து சென்றபோது ராட்சத அலை கரையை தாக்கியுள்ளது.

அப்போது, கைகள் கோர்த்தவாறு சென்றுக்கொண்டு இருந்த இருவரும் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டனர்.

ஆனால், மனைவியை காப்பாற்ற நினைத்த கணவர் அவரை கரையை நோக்கி வேகமாக தள்ளி விட்டுள்ளார்.

கரையில் விழுந்த மனைவி மயக்கமாகியுள்ளார். கணவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டதும் சிலர் உதவிக்கு சென்றுள்ளனர்.

இருவரும் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு செல்லப்பட்டனர். முதலுதவி சிகிச்சை அளித்தபோது கணவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

மருத்துவமனையில் மனைவி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். கணவரை சோதனை செய்தபோது அவர் கடலில் மூழ்கி மூச்சடைத்து உயிரிழந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.

மனைவியை காப்பாற்றிவிட்டு கணவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்