கனடாவில் இடம்பெறும் வருடாந்த உலகக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டிகள்

Report Print Dias Dias in கனடா
79Shares
79Shares
lankasrimarket.com

கனடா ரொறன்ரோ உலகத்தமிழல் பூப்பந்தாட்டப் பேரவையின் 5ஆவது உலகக்கிண்ண பட்மிண்டன் போட்டிகள் நாளை மற்றும் நாளை மறுதினம் (29,30) இடம்பெறவுள்ளன.

இதற்கான முழு ஏற்பாடுகளையும் WTBF இனால் உருவாக்கப்பட்ட கனேடிய போட்டிகளுக்கான உலகக்கிண்ண நிர்வாகக்குழு மேற்கொண்டு வருகின்றது.

இந்த போட்டிகள் 12 வயதிற்குட்பட்டோர் தொடக்கம் 60 வயதிற்கு மேற்பட்டோர் வரையில் ஆண், பெண் இருபாலாரையும் உள்ளடக்கியதாக 25 பிரிவுகளில் இடம்பெறவிருக்கின்றது.

குறித்த போட்டிக்கு பிரதமவிருந்தினராக ஜேர்மனி ambourg மாநில முன்னாள் பொருளாதார மற்றும் வேலைவாய்புத்துறை அமைச்சர் இயன் கரன் மற்றும் அவரது பாரியார் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

கனடாவின் பிரபல அரசியல் வல்லுனர்களான நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி, ஆனந்தசங்கரி, Councillor லோகன் கணபதி , நீதன் சண் நகரசபை உறுப்பினர் Scarborough ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த போட்டிகளின்போது 15 இற்கு மேற்பட்ட புலம்பெயர் நாடுகளிலிருந்தும், தாயகத்திலிருந்தும் 250 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த போட்டிகள் தொடர்பில் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிடுகையில் 2013இல் தனது 1ஆவது உலகக்கிண்ணப் போட்டியை ஆரம்பித்த WTBFஆனது 2014இல் பிரான்சிலும் 2015 இல் பிரித்தானியாவிலும் 2016இல் ஜேர்மனிலும் நடத்தி பெரும் வெற்றியை பதிவு செய்திருந்தது.

இதன்மூலம் மிகத்திறமையான பல வீரர்கள இணங்காணப்பட்டுள்ளார்கள். இவர்களை முன்னுதாரணப்படுத்தி பல புதிய வீரர்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றார்கள்.

பலர் அந்தந்த நாடுகளின் தேசிய தரப்பட்டியலில் மிக வேகமாக முன்னேறி வருகின்றார்கள்.

பிரித்தானியா, அவுஸ்திரேலியா, நோர்வே போன்ற நாடுகளில் தேசிய அணிகளிற்குள்ளும் இடம்பெறத்தொடங்கி தமிழினத்தை தலை நிமிர வைத்துள்ளார்கள்.

உலகக்கிண்ணப் போட்டிகளை நடத்துவதைத்தாண்டி தாயகத்திலும் வருடாவருடம் 2014 தொடக்கம் வடமாகாண விளையாட்டமைச்சு யாழ். மாவட்ட பூப்பந்தாட்ட சம்மேளனம் ஆகியவற்றின் ஆதரவுடன் வடக்கு கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாடசாலை மற்றும் பாடசாலை சாரா சமூகத்தை இணைத்த வகையில் பாரிய போட்டிகளையும் புதிய தொழில்நுட்பங்களுடன் இணைந்த பயிற்சி பட்டறைகளையும் நடாத்திவருகின்றது

மேலும் தேவையான வசதிகுறைந்த வீரர்களிற்கு போட்டி உபகரணங்கள் வழங்கி ஊக்குவித்து வருகின்றோம் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்