வருங்கால மனைவிக்காக குடும்பத்தினரை கொன்று குவித்த நபர்: நீதிமன்றத்தில் சொன்ன உண்மை கதை

Report Print Basu in கனடா
0Shares
0Shares
lankasri.com

கனடாவில் நபர் ஒருவர் சொந்த குடும்பத்தினரை கொன்று குவித்த வழக்கில் அனைத்து உண்மைகளும் நீதிமன்ற விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

டொராண்டோவில் தாய் மற்றும் இரண்டு சகோதரர்களை கொன்ற வழக்கில் 36 வயதுடைய பிரட் ரியான் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் குடும்பத்தினரை கொன்றதாக பிரட் ரியான் ஒப்புக்கொண்டுள்ளார்.

வங்கிக்கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ரியான், கடந்த 2010ம் ஆண்டு பரோலில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் பாக்ஸ்டர் என்ற பெண்ணுடன் ரியானுக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

தான் பல்கலைக்கழக படிப்பை முடித்துவிட்டு பணியாற்றி வருவதாக பாக்ஸ்டரிடம் ரியான் பொய் கூறியுள்ளார். வேலைக்கு செல்லாத ரியான் தாய் சூசனிடம் பணம் வாங்கி செலவழித்து வந்துள்ளார்.

இந்நிலையில் ரியான்- பாக்ஸ்டர் திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு பாக்ஸ்ரிடம் உண்மையை கூறிவிடுவேன் என தாய் சூசன் ரியானை மிரட்டியுள்ளார்.

இருவருக்கு வாக்குவாதம் முற்ற சூசன், மூத்த மகன் கிறிஸ்டோபரை உதவிக்கு அழைத்துள்ளார். கோபமடைந்த ரியான், கிறிஸ்டோபர் வருவதற்கு முன் தாய்யை அம்பால் குத்தி கழுத்தை நெரித்து கொன்று கேரேஜில் அடைத்துள்ளார்.

பின்னர், தாய் குரலை கேட்டு வந்த சகோதரர் கிறிஸ்டோபரையும் அம்பால் கழுத்தில் குத்தி கொன்று உடலை தாய் உடலுக்கு அருகே வைத்துள்ளார் ரியான்.

பின்னர், சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த மற்றொரு சகோதரனான அலெக்சாண்டரையும் குத்தியுள்ளார். பாதையில் சரிந்த அலெக்சாண்டர் உயிரிழந்துள்ளார்.

சத்தம் கேட்டு வந்த மற்றொரு சகோதரனான Leighயையும் ரியான் தாக்கியுள்ளார். ரியானிடமிருந்து தப்பித்த Leigh, உதவி கேட்டு சாலையில் ஓடியுள்ளார்.

அலெக்சாண்டர் உடலை கண்டுபிடித்த பொலிசார் வீட்டில் சோதனை செய்து சூசன் மற்றும் கிறிஸ்டோபர் உடலை கண்டெடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பிரட் ரியான், நீதிமன்ற விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டு நடந்த சம்பவத்தை விவரித்துள்ளார்.

ரியானுக்கு 25 ஆண்டுகளுக்கு பரோலில் வெளிவராத படி கடும் சிறைத்தண்டனை வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்