பெற்ற குழந்தையை கொன்ற தாயாருக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Report Print Peterson Peterson in கனடா
138Shares
138Shares
lankasrimarket.com

கனடா நாட்டில் பெற்ற குழந்தையை சித்ரவதை செய்து கொலை செய்த தாயாருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

கனடாவில் உள்ள மனிடோபா நகரில் Vanessa Lynn Bushie(39) என்பவர் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார்.

இத்தம்பதிக்கு கடந்த 2013-ம் ஆண்டு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால், குழந்தையை பெற்றோர் சரியாக பராமரிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் பெற்ற குழந்தையை தாயார் சித்ரவதை செய்து வந்துள்ளார்.

இதுமட்டுமில்லாமல், குழந்தைக்கு சத்தான உணவுகளை கொடுக்காமல் அதன் ஆரோக்கியத்தையும் தாயார் கெடுத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு யூலை 17-ம் திகதி உடல்நலம் சரியில்லாத தனது குழந்தையை தூக்கிக்கொண்டு தாயார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

குழந்தையை மருத்துவர்கள் பரிசோதனை செய்வதற்கு முன்னதாகவே குழந்தை உயிரிழந்துள்ளது.

பின்னர், சடலத்தை மருத்துவர்கள் ஆய்வு செய்தபோது வயிற்றில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதையும் பல எழும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளதையும் கண்டுபிடித்தனர்.

மேலும், குழந்தைக்கு போதைய ஊட்டச்சத்து வழங்காமல் உடல் மெலிந்திருந்ததையும் மருத்துவர்கள் கண்டுபிடித்து பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் தாயாரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

பல மாதங்களாக நடைபெற்ற விசாரணையின் முடிவில் குழந்தையின் மரணத்திற்கு தாயார் தான் காரணம் என ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று முன் தினம் இவ்வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது, குழந்தையை சித்ரவதை செய்து உயிரிழக்க காரணமாக இருந்த தாயாருக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் 14 ஆண்டுகளுக்கு தாயாரை பரோலில் வெளியே விடக் கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்