கார் மீது பயங்கரமாக மோதிய லொறி: பரிதாபமாக பலியான அண்ணன், தங்கை

Report Print Peterson Peterson in கனடா
249Shares
249Shares
lankasrimarket.com

கனடா நாட்டில் கார் மீது லொறி ஒன்று பயங்கரமாக மோதிய விபத்தில் அண்ணன் மற்றும் தங்கை என இருவர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்கேரி நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் அமைந்துள்ள கார் பார்க்கிங்கில் தான் இத்துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த புதன்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் 20 வயதான இளைஞர் ஒருவர் சூப்பர் மார்க்கெட்டிற்கு காரில் சென்றுள்ளார்.

காரின் பின் இருக்கையில் அவரது தங்கை அமர்ந்துள்ளார். காரை பார்க்கிங்கில் நிறுத்துவதற்காக திருப்பியபோது வேகமாக வந்த லொறி ஒன்று கார் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே அண்ணன் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். உயிருக்கு போராடிய தங்கையை பொலிசார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கடந்த இரண்டு தினங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

லொறியை ஓட்டி வந்த 39 வயது மதிக்கதக்க நபருக்கும் காயம் ஏற்பட்டதால் அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சாலை விபத்தில் அண்ணன் மற்றும் தங்கை ஆகிய இருவரும் பலியாகியுள்ள சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்