பாதிரியார் வேடத்தில் சிறுமிகளிடம் பாலியல் தாக்குதல் நடத்திய நபர் கைது

Report Print Peterson Peterson in கனடா
233Shares
233Shares
lankasrimarket.com

கனடா நாட்டில் பாதிரியார் வேடத்தில் சிறுமிகளிடம் பாலியல் தாக்குதல் நடத்திய நபர் ஒருவரை அந்நாட்டு பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

எட்மோண்டன் நகரில் Justin Georges Stephen Coulombe(33) என்பரை தான் பொலிசார் கைது செய்துள்ளனர்.

சிறுமி ஒருவருடன் ஓன்லைனில் அறுவெறுக்கத்தக்க வகையில் தகவல்களை அனுப்பியதாக சிறுமியின் தாயார் கடந்த யூலை 27-ம் திகதி புகார் கூறியுள்ளார்.

இப்புகாரை தொடர்ந்து பாதிரியார் வேடத்தில் இருந்த நபர் கைது செய்யப்பட்டார். அப்போது, அவர் மீது மேலும் 8 பாலியல் புகார்கள் பதிவு செய்யப்பட்டது.

எனினும், பிணையில் சிறையில் இருந்து வெளியே வந்த பாதிரியாரை பொலிசார் கடந்த வியாழக்கிழமை இரண்டாவது முறையாக கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பாலியல் புகார்களை தொடர்ந்து தற்போது மீண்டும் அவர் மீது கூடுதலாக 4 பாலியல் புகார்கள் சுமத்தப்பட்டுள்ளன.

கைது நடவடிக்கையை தொடர்ந்து பொலிசார் நபரின் வீட்டில் சோதனை செய்தபோது, அவரது கணிணியில் சிறுமிகளின் ஆபாசப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து நபரிடம் இருந்து செல்போன், கணிணி உள்ளிட்ட மின்சாதன பொருட்களை பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நபரை பிணையில் வெளியே விடுவது தொடர்பான மறுவிசாரணை அடுத்த வாரம் நீதிமன்றத்திற்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்