கனடா முழுவதும் தேடப்பட்ட முக்கிய கொலையாளி கைது

Report Print Peterson Peterson in கனடா
261Shares
261Shares
lankasrimarket.com

கனடாவில் நபர் ஒருவரை கொலை செய்துவிட்டு தலைமறைவான நபர் ஒருவரை பொலிசார் நீண்ட தேடலுக்கு பின்னர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கனடாவின் Saskatchewan மாகாணத்தில் உள்ள ரெஜினா நகரில் Daniel Richard Dipaolo(51) என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

நபரின் வீட்டில் சடலத்தை ஆராய்ந்தபோது, இந்த கொலை ஒரு நபரால் செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லை என பொலிசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து யூன் மாதம் நபர் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தியபோது மேலும் மூவர் இக்கொலையில் தொடர்புடையது தெரியவந்தது.

உடனடியாக ஆதாரங்களை திரட்டி மூவரையும் கைது செய்ய கனடா முழுவதும் வாரண்ட் பிறபிக்கப்பட்டது.

சில மாதங்களுக்கு பின்னர் வின்னிபெக் நகரில் கொலையில் தொடர்புடைய இரண்டு பேரை கைது செய்துவிட்டதாக அந்நகரை சேர்ந்த பொலிசார் தகவல் அளித்துள்ளனர்.

இக்கைது நடவடிக்கையை தொடர்ந்து மூன்றாவது கொலையாளியை பிடிக்க பொலிசார் வலை விரித்தபோது Johnathan Edward Kakewash(31) என்ற கொலையாளியும் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

கொலைக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.

மேலும், மூவரையும் விசாரணை செய்தபோது ஏற்கனவே பல குற்றங்களில் அவர்களுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது.

மூவரையும் சிறையில் அடைத்துள்ள பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்