மூவரை கொலை செய்த வாலிபருக்கு 75 ஆண்டுகள் சிறை தண்டனை

Report Print Peterson Peterson in கனடா
0Shares
0Shares
Cineulagam.com

கனடா நாட்டில் குழந்தை உள்பட மூவரை கொலை செய்த வாலிபர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அல்பேர்ட்டா மாகாணத்தை சேர்ந்த Derek Saretzky(24) என்ற வாலிபருக்கு தான் நீதிமன்றம் இத்தண்டனையை விதித்துள்ளது.

தனது தாத்தா மற்றும் பாட்டி ஆகிய இருவருடனும் Hanne Meketech (69) என்பவர் நட்பாக பழகி வந்தது வாலிபருக்கு பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு யூன் மாதம் வீட்டிற்கு வந்த Hanne Meketech-வின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் நிகழ்ந்து 5 நாட்களுக்கு பின்னர் Terry Blanchette என்பவரை கொலை செய்துவிட்டு அவரது மகளை தூக்கிச் சென்றுள்ளார்.

காட்டுப்பகுதிக்கு சென்ற வாலிபர் குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

பின்னர், குழந்தையின் உடலை கிழித்து ரத்தத்தை குடித்துள்ளார். இதயத்தை வெட்டி தீயில் வேக வைத்து சாப்பிட்டுள்ளார்.

இக்கொடூரம் அரங்கேறியதற்கு பின்னர் குழந்தையின் சடலத்தை எரித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

இவ்விவகாரம் வெளியே வந்ததை தொடர்ந்து பொலிசாரிடம் வாலிபர் சிக்கியுள்ளார்.

சுமார் 6 மாத விசாரணைக்கு பின்னர் அனைத்து குற்றங்களையும் வாலிபர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், இக்கொலைக்கு உண்மையான காரணம் எதுவும் தெரியவரவில்லை.

‘என் மனதில் மோசமான செயல்களை செய்’ என கடவுள் எனக்கு கட்டளையிட்டதாக வாலிபர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

வாலிபரை மருத்துவ பரிசோதனை செய்தபோது அவர் மனநலம் பாதித்தவர் இல்லை எனவும் தெரியவந்தது.

கனடா நாட்டு சட்டப்படி கொலை குற்றத்திற்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்பதால் மூவரை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனையும், 75 ஆண்டுகளுக்கு பரோலில் வெளியே வர முடியாத வகையில் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்