தமிழ் பொலிஸ் உதவியால் கனடா குடிமகனுக்கு கிடைத்த வேலைவாய்ப்பு

Report Print Peterson Peterson in கனடா
0Shares
0Shares
lankasri.com
advertisement

கனடாவில் கடை ஒன்றில் திருட சென்ற வாலிபர் ஒருவருக்கு தமிழ் பொலிஸ் அதிகாரி ஒருவர் உதவியதை தொடர்ந்து அவருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரொறன்ரோ நகரில் நிரன் ஜெயநேசன் என்ற தமிழர் பொலிஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

advertisement

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வால்மார்ட் கடையில் திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக ஜெயநேசனுக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலை பெற்ற பொலிசார் மற்றொரு பொலிசாருடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது, கடையில் ஆடைகளை திருட முயன்ற 18 வயதான வாலிபரை பிடித்து வைத்துள்ளனர்.

வாலிபரிடம் விசாரணை நடத்தியபோது, ‘புதிய வேலைக்காக நேர்முகத் தேர்வுக்கு செல்ல உள்ளதாகவும், அதற்கு தேவையான உடுப்புகள் இல்லாத காரணத்தினால் திருட முயன்றதாக’ வாக்குமூலம் அளித்துள்ளார்.

வாலிபரின் வாக்குமூலத்தை கேட்டு வருத்தமடைந்த ஜெயநேசன் அந்த வாலிபருக்கு தனது சொந்த பணத்தில் அவருக்கு தேவையான உடுப்புகளை வாங்கி கொடுத்து எவ்வித வழக்கும் பதியாமல் அனுப்பி வைத்துள்ளார்.

‘தன்னுடைய அடிப்படை தேவையாக தான் வாலிபர் திருட முயன்றுள்ளார். மேலும், வறுமையின் காரணமாக அவர் குற்றம் புரிந்துள்ளதாகவும் ஜெயநேசன் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று செய்தி நிறுவனம் ஒன்றிற்கு ஜெயநேசன் பேட்டி அளித்துள்ளார்.

அப்போது, ‘சம்பவம் நிகழ்ந்து 4 நாட்களுக்கு பின்னர் அந்த வாலிபர் தனக்கு மின்னஞ்சல் அனுப்பியதாகவும், தனக்கு ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளதாகவும்’ அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தான் வாங்கிக்கொடுத்த உடுப்புகளை அணிந்துக்கொண்டு அவர் நேர்முகத் தேர்வில் பங்கேற்றதாக உற்சாகமாக தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமில்லாமல், வாலிபரின் தந்தைக்கும் புதிய வேலை கிடைத்துள்ளதாகவும் ஜெயநேசன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்