13 வயது மகளை 50 வயதான நபருக்கு திருமணம் நடத்த முயன்ற பெற்றோருக்கு சிறை தண்டனை

Report Print Peterson Peterson in கனடா
0Shares
0Shares
Cineulagam.com

கனடாவில் 13 வயதான மகளை 50 வயதான நபருக்கு திருமணம் செய்ய முயன்ற பெற்றோருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள Bountiful என்ற நகரில் Brandon Blackmore(71) Gail Blackmore(60) என்ற தம்பதி வசித்து வந்துள்ளனர்.

இருவரும் ஏற்கனவே விவாகரத்து பெற்ற நிலையில் கடந்த 2004-ம் ஆண்டு தங்களுடைய 13 வயதான மகளை அமெரிக்காவிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

விருப்பம் இல்லாமல் அமெரிக்கா சென்ற சிறுமி அங்கு நிகழ்ந்த சம்பவங்களை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அமெரிக்காவில் கிறித்துவ மதத்தலைவரான Warren Jeffs(50) என்பவருடன் தனக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் திட்டம் தீட்டியுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதும் பெரும் அசம்பாவிதம் தடுத்து நிறுத்தப்பட்டது.

சிறுமியை திருமணம் செய்ய முயன்ற கிறித்துவ மதத்தலைவர் இரண்டு கிரிமினல் குற்றங்கள் காரணமாக தற்போது சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

சிறுமியின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்த கனேடிய பொலிசார் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் இவ்வழக்கின் இறுதி வாதம் நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

அப்போது, 16-க்கு கீழ் உள்ள மகளுக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற குற்றத்திற்காக தந்தைக்கு ஒரு ஆண்டும், தாயாருக்கு 7 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்