'தமிழச்சியாய் பிறந்ததால் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றேன்' கனடா வாழ் இலங்கைப் பெண்

Report Print Ramya in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

உள்நாட்டு யுத்தம் காரணமாக இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து ஏராளமான மக்கள் கனடாவுக்குச் சென்றுள்ளார்கள்.

அவ்வாறு புலம்பெயர்ந்து சென்றவர்களும், அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளும் அந்த நாடுகளில் பெரும் சிரமத்திற்குள்ளாவதுடன், பல அவமானங்களையும் சுமக்க வேண்டிய நிலை உள்ளது.

ஆனால் அனைத்தையும் தாண்டி சாதனை படைத்தவர்களின் பட்டியல் தற்போது அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

அந்த வகையில் இலங்கையிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்து சென்ற தம்பதியினருக்கு மகளாகப் பிறந்த ஆர்த்தி திருத்தணிகன், தன்னுடைய வாழ்க்கை அனுபவம் மற்றும் தாம் கடந்து வந்த கடினமான பாதைகள் தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றிடம் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

நான் யார்?..

நெருக்கடியான காலத்தில் இலங்கையை விட்டு வெளியேறிய பெற்றோர்களுக்கு பிறந்து வளர்ந்தவள் நான். இரண்டாவது தலைமுறை தமிழ் கனடிய பெண்.

பெற்றோர் தங்கள் வாழ்க்கையை புதிதாக தொடங்குவதற்கான நம்பிக்கையில் உள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற போரினால் எனது பெற்றோரின் அண்டைய வீட்டவர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் உடல்கள் சிதறியது. அவர்கள் தங்களுடைய தாய் நாட்டை விட்டு விலகிச் சென்றால் மாத்திரமே உயிர் பிழைக்கும் சாத்தியம் எனது பெற்றோருக்கு ஏற்பட்டது.

அவர்கள் தங்கள் முதுகில் ஆடைகளையும், கற்றுக் கொண்ட கலாச்சாரத்தையும் மாத்திரமே கனடாவுக்கு கொண்டு வந்தார்கள். அவர்களுக்கு, கனடாவின் கலாச்சாரத்தை தழுவுவதற்கு பல ஆண்டுகள் சென்றது.

அவர்களில் ஒரு பகுதியினர் இன்னும் பிறந்து வளர்ந்த இலங்கை கலாச்சாரத்திலேயே தான் வாழ்ந்து வருகின்றனர்.

நான் ஒரு தமிழ் பெண்ணாக எழுப்பப்பட்டேன். Markham பகுதியில் வாழ்ந்தேன், கனேடிய பெண்ணாக வளர்க்கப்பட்டேன், என்னுடைய விடயத்தில் அதிகமாக அடையாளம் காணப்பட்ட ஒன்று “தமிழ் வளர்ப்பாகும்”.

நான் மற்ற குழந்தைகளை போல் இல்லை என்று எனது பாடசாலையினால் விரைவாக கண்டுபிடிக்கப்பட்டது.

Markham பாடசாலையில் படிக்கும்போது, எனக்கும் எனது வகுப்பு தோழர்களுக்கும் இடையில் வித்தியாசத்தை உணர்ந்தேன். அவர்கள் கோவிலுக்குச் செல்லவில்லை, என்னை போல் அவர்கள் பாவாடை தாவணி அணியவில்லை.

நான் செய்தது போல் அவர்கள் வீட்டில் தங்கள் கைகளால் சாப்பிடவில்லை. என்னை போல் அவர்கள் பழுப்பு நிறம் இல்லை. நான் வித்தியாசமாக காணப்பட்டதால், என்னுடன் ஒத்துப்போகவில்லை, ஏனென்றால் வீட்டில் என் வாழ்க்கை வித்தியாசமானது, அதற்கு காரணம் நான் தமிழன். இதனால் நான் மோசமான தனிமையை உணர்ந்தேன்.

இந்த வேறுபாடுகளை நான் கவனித்த போது, ஒரு கனடியன் போல் ஒரு போதும் உணரப்படவில்லை. என் கனவில் நான் ஒரு உண்மையான கனடியப் பெண் என கருத ஆரம்பித்தேன்.

அதற்காக எனது வாழ்வின் தமிழ் பாரம்பரியத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. தமிழ் கலாச்சாரத்தை தோற்றுவிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் நான் ஒதுக்கி விட்டேன். என் மனதில், நான் செய்ததை சரியாக செய்தேன்.

எனது தமிழ் பாரம்பரியத்திலிருந்து என்னை தூரப்படுத்துவதற்கு எவ்வளவு கடினமாக முயற்சி செய்த போதிலும், அது ஒரு புலியைப் போல் என்னைப் பதுங்கி என் மீதே பாய்ந்தது. என்னை கீழே தள்ளியது. என் தமிழ் தன்மை என்னை ஒட்டிக்கொண்டது.

நான் வீழ்ச்சியடைவதாக உணர்ந்தேன். ஒரு தமிழ் பெண்ணாக அல்ல கனேடியராகவே நான் விரும்பினேன். ஆனால் என் தமிழ் கலாச்சாரத்திலிருந்து என்னை ஒதுக்கிவிட முடியவில்லை. அனைத்தும் பொருந்திய கனேடிய பெண்ணாகவே நான் விரும்பினேன்.

பின்னர் “நான் ஏன் வெள்ளையராக பிறக்கவில்லை?” என்ற கேள்வி என் தலையில் முட்டி மோதியது. வெள்ளை இனத்தை நோக்கி எனது வியப்பு அதிகரித்தது.

பல போராட்டங்கள் எனது வாழ்வில் ஏற்பட்டது. நண்பர்கள் மட்டத்தில் பல சவால்களை சந்தித்தேன். பாடசாலையில் உணவு எடுத்து கொள்ளும் போது உணவினால் அவமதிக்கப்பட்டேன். இவ்வாறே பல நாட்கள் கடந்து சென்றது.

எனது ஒன்பதாவது வகுப்பின் போது, நவம்பர் மாதம் ஒன்றில் இலங்கை உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்த பல தமிழ் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நிறுவப்பட்ட ஒரு தினமான மாவீரர் நாளில் தன்னார்வ தொண்டனை மேற்கொள்ளுமாறு எனது அம்மா என்னிடம் கேட்டுக் கொண்டார்.

நான் ஐந்தாம் வகுப்பு முதலே மாவீரர் நாளை நினைவு கூருவதற்கு செல்வேன்.

எனினும் 9ஆம் வகுப்பிலேயே அந்த நாளுக்கு பின்னால் உள்ள கதையை அறிந்து முதல் முறையாக அறிந்து தன்னார்வமாக சென்றேன்.

இந்த யுத்தம் இலங்கை இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்றது. இந்த காலப்பகுதியில், என் பெற்றோர்கள் உட்பட 300,000 க்கும் அதிகமான இலங்கையர்கள் இலங்கையிலிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தார்கள்.

இந்த உள்நாட்டு போரின் கதையை முழுமையான அறிந்த போது என் கண்கள் திறந்தது. அன்று நான் வெள்ளையாக பிறக்காதது குறித்து மகிழ்ச்சியடைந்தேன். ஏன் நான் வெள்ளையராக பிறக்கவில்லை என்ற கேள்வியை அன்று முதல் நான் கைவிட்டேன்.

தமிழ் மக்களின் பெருமையை உணர்ந்தேன். தமிழ் பெண்ணாய் பிறந்தது குறித்து மகிழ்ச்சியடைந்தேன்...” என அந்த பெண் தனது வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்