விரைவில் பாலினம் குறிப்பிடப்படாத கடவுச்சீட்டு

Report Print Arbin Arbin in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

கனடாவில் பாலின சமத்துவத்தைப் போற்றும் வகையில், விரைவில் கடவுச்சீட்டில் பாலினம் குறிப்பிடுவதை அந்நாட்டு அரசு நிறுத்தவுள்ளது.

பாலினம் குறிப்பிடப்படாத கடவுச்சீட்டுகளை வழங்க கனடா திட்டமிட்டிருக்கிறது. இதன்படி, கடவுச்சீட்டு வைத்திருப்பவர் ஆணா, பெண்ணா என்பது கடவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்காது.

அதற்குப் பதிலாக எக்ஸ் என்ற குறியீடு மட்டும் அச்சிடப்பட்டிருக்கும். பாலி‌னச் சமநிலையைப் பேணு‌வதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டிருப்பதாக அந்நாட்டு குடியேற்றத்துறை அமைச்சர் அகமது ஹுசைன் தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டு மட்டுமல்லாமல், மற்ற அரசு அடையாள அட்டைகளிலும் பாலினம் குறிப்பிடப்படாது என்று கனடா அரசு கூறியுள்ளது. இதன்படி ஆகஸ்ட 31 ஆம் திகதியிலிருந்து கனடிய திருநங்கைகள் தாங்கள் ஆண் அல்லது பெண் என்பதை தங்கள் கடவுச்சீட்டுக்களில் அடையாளம் காட்ட தேவையில்லை.

முன்னதாக, கடந்த யூன் மாதம் கனடாவின் மனித உரிமைகள் சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதில், இனம், மதம், பாலினம், வயது ஆகியவற்றால் சமூகத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டால் அது மனித உரிமை மீறல் என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்