புறப்பட்டவுடன் தரையில் விழுந்த விமானம்: இருவர் பலி

Report Print Peterson Peterson in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

கனடா நாட்டில் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டவுடன் விமானம் ஒன்று தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் Saskatchewan மாகாணத்தில் உள்ள ஸ்விஃட் கரண்ட் நகருக்கு அருகில் தான் இந்த மோசமான விபத்து நிகழ்ந்துள்ளது.

மாகாண தலைநகரான Regina-விற்கு நேற்று முன் தினம் மாலை 7 மணியளவில் சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் திடீரென தலைகீழாக இறங்கிய விமானம் தரையில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விமானம் விழுந்த அடுத்த வினாடி தீப்பற்றி எரிந்ததால் அதில் பயணம் செய்த இருவரும் உடல் கருகி பலியாகியுள்ளனர்.

இதுக் குறித்து நகரின் செய்தி தொடர்பாளரான Michael Boutilier என்பவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், விபத்திற்குள்ளான விமானம் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது.

விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது தொடர்பாக விசாரணையை முடக்கி விட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்