அசுர வேகத்தில் காரை ஓட்டிய பெண்: நிகழ்ந்த விபத்தில் நண்பன் பலி

Report Print Peterson Peterson in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

கனடா நாட்டில் சாலை விபத்தில் நபர் ஒருவர் பலியான வழக்கில் அவரது தோழிக்கு சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மனிடோபா மாகாணத்தில் உள்ள வின்னிபெக் நகரில் Kendra Stuart(19) என்பவர் வசித்து வருகிறார்.

கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் திகதி James Hayes(20) என்ற நண்பர் மற்றும் மற்றொரு பெண்ணுடன் அவர் காரில் பயணம் செய்துள்ளார்.

காரை தோழி ஓட்டியபோது பின் இருக்கையில் நண்பரும் மற்றொரு பெண்ணும் அமர்ந்து சென்றுள்ளனர்.

அதிகாலை 4 மணியளவில் கார் பயணம் செய்தபோது மூவரும் சீட் பெல்ட் அணியவில்லை எனக் கூறப்படுகிறது.

வின்னிபெக் நகருக்கு அருகில் உள்ள Henderson நெடுஞ்சாலையில் கார் சென்றபோது அந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

அசுர வேகத்தில் காரை ஓட்டிய பெண் ஒரு கட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்துள்ளார்.

தாறுமாறாக சென்ற கார் தடுப்பு சுவர் மீது மோதி சாலையில் உருண்டுள்ளது.

இவ்விபத்தில் நண்பர் சம்பவ இடத்திலேயே பலியானார். காரை ஓட்டிய தோழியும் மற்றொரு பெண்ணும் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில், 70 கி.மீ வேகத்தில் செல்ல வேண்டிய கார் 99 கி.மீ வேகத்தில் சென்றது தான் விபத்துக்கு காரணம் என கண்டுபிடித்துள்ளனர்.

தோழி அஜாக்கிரதையாக காரை ஓட்டிய குற்றத்திற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தன் மீதான குற்றத்தை எதிர்த்து பெண் போராடியுள்ளார். ஆனால், அவருடைய வாதத்தை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பெண் மீதான குற்றம் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் அவருக்கு இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்