கனேடிய தூதர் வீட்டில் பேய் நடமாடுகிறதா?

Report Print Peterson Peterson in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

கனடா நாட்டை சேர்ந்த தூதர அதிகாரி ஒருவர் தனது வீட்டில் நள்ளிரவு நேரத்தில் பேய் நடமாடுவதாக வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐர்லாந்து நாட்டிற்கான கனடா தூதரக அதிகாரியாக Kevin Vickers என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து ஐயர்லாந்து தலைநகரான டப்ளினில் உள்ள அரசு மாளிகையில் தூதரக அதிகாரி தங்கி வருகிறார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் பேஸ்புக்கில் அவர் பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘எனது வீட்டில் சில அமானுஷ்ய சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

நள்ளிரவு நேரத்தில் யாரோ ஒருவர் நடந்து செல்வது, பலமாக மூச்சு விடுவது, ஓலம் எழுப்புவது போல பல சம்பவங்கள் நிகழ்ந்து வருவதால் மிகவும் அச்சமாக உள்ளது.

எனது வீட்டில் உள்ள பணியாட்கள் கூட இந்த அமானுஷ்ய நடவடிக்கைகளை உணர்ந்துள்ளதாக கெவின் தெரிவித்துள்ளார்.

தூதரக அதிகாரி அச்சப்படுவதற்கு ஒரு உறுதியான காரணமும் கூறப்படுகிறது.

ஐயர்லாந்து நாட்டு பிரித்தானிய காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோது அந்நாட்டிடம் இருந்து சுதந்திரம் பெற பல போராட்டங்கள் நடந்து வந்தன.

ஐர்லாந்து முன்னணி கட்சியை சேர்ந்த Patrick Pearse என்பவர் தலைமையில் 1916- ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெரும் புரட்சி ஒன்று வெடித்தது.

இப்புரட்சியின் காரணமாக 450 பேர் கொல்லப்பட்டதுடன், 2,600 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

புரட்சியை தூண்டிய குற்றத்திற்காக நீதிமன்றம் Patrick Pearse-விற்கு மரண தண்டனை வழங்கியது.

இதில் முக்கிய விடயம் என்னவென்றால், Patrick Pearse அப்போது தங்கியிருந்த பகுதியில் தான் தற்போது கனடா தூதரக அதிகாரியான கெவினும் தங்கி வருகிறார்.

எனவே, மரண தண்டனை விதிக்கப்பட்ட Patrick Pearse தான் தற்போது ஆவியாக தனது வீட்டில் தங்கியிருப்பதாக கெவின் அச்சம் தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்