டெக்சாஸ் வெள்ளத்தில் தவித்த பெண்! கனடாவில் இருந்து காப்பாற்றிய தமிழ் இளைஞன்

Report Print Vethu Vethu in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய பெண்ணுக்கு கனடா தமிழர் ஒருவர் உதவிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பெண் உதவிக்காக அவசர சேவையின் உதவியை நாடிய போது நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

டெக்சாஸ், Arlington பகுதியை சேர்ந்த குறித்த பெண், தனது மகள் மற்றும் 4 பேரப்பிள்ளைகளுடன் வெள்ளத்தில் சிக்கியிருந்த நிலையில் டெக்சாஸ் Beaumont பகுதி அவசர சேவையை நாடியுள்ளார்.

அவர் ஒரு Beaumont பகுதி சேவை முகவரை தொடர்பு கொண்டுள்ளார். எனினும் அவர் தொடர்பு கொண்டது டெக்சாஸ் Beaumont சேவை முகவரை அல்ல. அவர் கனடாவின் Beaumont பகுதி சேவை முகவர் ஒருவரையே.

கனடா, Beaumont பகுதியை சேர்ந்த 30 வயதுடைய தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் சிவசண்முகம் என்ற தமிழரிடமே குறித்த பெண் கோரிய உதவி கோரிக்கை சென்றடைந்துள்ளது.

தான் ஒரு குடிமகளின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதாக சிவசண்முகம் தெரிவித்துள்ளார்.

தங்கள் வீடு முழுமையாக நீருக்குள் மூழ்கியுள்ளதனை குறிப்பிட்டு வந்த செய்தியில், அவர்கள் டெக்சாஸ் Beaumont பகுதி அவசர சேவை உதவியை நாடியுள்ளதை தான் புரிந்து கொண்டதாக சிவசண்முகம் தெரிவித்துள்ளார்.

“நான் அந்த பெண்ணை தொடர்பு கொண்டேன், அதுவொரு அபயக்குரலாக எடுத்துக் கொண்டேன். ஏன் என்றால் அந்த பெண்ணுக்கு கிடைத்த ஒரே தகவல் கருவியாக இது இருந்திருக்கலாம்” என சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் நான் டெக்சாஸ், Beaumont பகுதி தீயணைப்பு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டேன். அதன் பின்னர் பெண்ணின் மகளுடன் தொலைபேசி ஊடாக பேசினேன் என சிவசண்முகம் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு உணவு இல்லை, உபகரணங்கள் அனைத்து சேதமடைந்துள்ளதுடன், சுகாதார பிரச்சினையில் அவர்கள் இருப்பதனை சண்முகம் அறிந்து கொண்டார்.

அதன் பின்னர் அவர் தொடர்ந்து டெக்சாஸ் அவசர பிரிவுகளுக்கு அழைப்பேற்படுத்தி அந்த குடும்பத்திற்கான உதவிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.

அவர்கள் தற்போது மீட்கப்பட்டு வேறு இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பாக இருக்கின்றார்கள். உணவு மற்றும் அனைத்து வசதிகளும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

டெக்சாஸ் சேவையை விடவும் இந்த சேவை மிகவும் உதவியதெனவும், அவரது அழைப்பு குறித்து நாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், அந்த பெண்ணின் மகன் கீஷா என்பவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் தொடர்புகளை தீவிரமாக எடுத்து கொள்வோம். . "எங்களுக்கு இங்கு 8 முதல் 5 மணி வரையிலான வேலை அல்ல, இது போன்ற சூழ்நிலைகளில், யாருக்கும் உதவ தயாராக இருப்போம் என சண்முகம் தெரிவித்துள்ளார்.

தாம் டெக்சாஸ் பகுதியில் இருந்து உதவுவதனை போன்ற உணர்வை அவர்களுக்கு வழங்கினோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இளைஞரான சிவசண்முகம் இந்த சேவை பலரால் பாராட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்