தேனீக்களை தாடியாக வைத்து சாதனைப் படைத்த விசித்திர மனிதன்

Report Print Gokulan Gokulan in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

கனடாவை சேர்ந்த ஜூவான் கார்லோஸ் நோகுஸ் ஆர்டிஸ் என்பவரே இவ்வாறான சாதனையை படைத்திருக்கிறார்.

ஒன்டாரியோ மாகாணத்தில் தேனீ பண்ணை ஒன்றில் வேலை செய்யும் ஜூவான் கார்லோஸ் நோகுஸ் ஆர்டிஸ், சரியாக 61 நிமிடங்கள் தன்னுடைய முகத்தில் தேனீக்களை தாடியாக வைத்திருந்து சாதனைப்படைத்துள்ளர் இவர்.

இவர் முந்தைய நேர பதிவைவிட எட்டு நிமிடங்கள் அதிகமாக தேனீக்களை தாடியாக வைத்திருந்து அவர் இந்த புதிய பதிவை உருவாக்கியுள்ளார்.

தேனீக்கள் இரண்டு முறை கொட்டியபோதும் அமைதியாக இருந்த ஆர்டிஸ், முந்தைய சாதனையை முறியடித்த பின்னரும் இவர் தேனீக்களை விரட்டிவிடும் வரை அசையாமல் அமர்ந்திருந்தார்.

இதனைக்குறித்து இவர் கூறுவதாவது இந்த சாதனை முறியடிப்பு முயற்சியில் ஈடுபடுமுன் இருமுறை மட்டுமே இதில் பயிற்சி எடுத்திருத்து இருந்தேன் எனவும் , நான் இந்த தேனி தாடி வைத்துக்கொள்ளும் கலையில் இன்னும் ஒரு புதுமுகம் தான் என்றும் தன்னை பற்றி கூறிக் கொள்கிறார்.

- BBC

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்