சிகரெட் பிடித்த நபருக்கு 87 ஆயிரம் ரூபாய் அபராதம்

Report Print Peterson Peterson in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

கனடா நாட்டில் சிகரெட் பிடித்துவிட்டு தீயை அணைக்காமல் கீழே போட்ட நபருக்கு அந்நாட்டு பொலிசார் 87 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய கொலம்பியாவில் சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சுமார் 10,600 சதுர கி,மீ தூரமுள்ள வனம் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

காட்டுத்தீ குறித்து பொலிசார் விசாரணையை தொடங்கியபோது யாரோ ஒரு நபர் சிகரெட் பிடித்து விட்டு அதனை அணைக்காமல் கீழே போட்டதால் தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தை தொடர்ந்து சிகரெட்டை அணைக்காமல் கீழே போடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று லாங்ஃபோர்ட் நகரில் லொறி ஓட்டுனர் ஒருவர் சிகரெட் பிடித்தவாறு வாகனத்தை ஓட்டியுள்ளார்.

பின்னர், லொறியில் இருந்தவாறு சிகரெட்டை அணைக்காமல் வெளியே வீசியுள்ளார்.

இதனை கண்காணிப்பு கமெரா மூலம் கண்டுபிடித்த பொலிசார் அவரை லொறி ஓட்டுனரை சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.

சிகரெட் துண்டை வீசியது உறுதி செய்யப்பட்டதும் அவருக்கு 575 டொலர்(87,877 இலங்கை ரூபாய்) அபாரதத்தை பொலிசார் விதித்துள்ளனர்.

சிகரெட்டை வீசிய காரணத்திற்காக 575 டொலர் அபராதம் விதித்துள்ளது கண்டிக்கத்தக்கது என லொறி ஓட்டுனர் வேதனை தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய கொலம்பியாவில் கடந்த ஆண்டு மட்டும் சிகரெட்டை அணைக்காமல் வீசிய 153 நபர்களுக்கு 307 டொலர் முதல் 1,150 டொலர் வரை அபராதமாக விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்