தாயாரின் அஸ்தியை திருடிய மர்ம நபர்: உருக்கமான கோரிக்கை விடுத்த மகள்கள்

Report Print Kalam Kalam in கனடா
0Shares
0Shares
lankasri.com
advertisement

கனடா நாட்டில் தாயாரின் அஸ்தியை மர்ம நபர் ஒருவர் திருடிச்சென்று விட்டதால் அதனை திரும்ப பெறுவதற்காக மகள்கள் இருவரும் பேஸ்புக்கில் உருக்கமான கோரிக்கையை வெளியிட்டுள்ளனர்.

ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Pembroke நகரில் பெற்றோர் தங்களது இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளனர்.

advertisement

தந்தை மற்றும் தாயார் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அதிகளவில் அன்பும் பாசமும் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தாயாருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

மனைவியின் சடலத்தை எரித்த கணவர் அவரது அஸ்தியை ஒரு ஜாடியில் வைத்து பத்திரமாக பாதுகாத்து வந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை அன்று தந்தை தங்கியிருக்கும் வீட்டில் அளவுக்கு அதிகமான பொருட்கள் உள்ளதால் அவற்றை விற்பனை செய்ய மகள்கள் இருவரும் விளம்பரம் அளித்துள்ளனர்.

விளம்பரத்தை பார்த்த சுமார் 100 பேர் தந்தையின் வீட்டிற்கு சென்று பொருட்களை பார்த்துள்ளனர்.

பின்னர், நபர்கள் வெளியே சென்றதும் வீட்டில் இருந்த ஜாடியை காணாமல் தந்தையும் மகள்கள் இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுக் குறித்து பேஸ்புக்கில் மகள்கள் இருவரும் ஒரு உருக்கமான கோரிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அதில், ‘தந்தைக்கும் எங்களுக்கும் தாயாரின் அஸ்தி தான் ஒரே நினைவு பொருளாக உள்ளது.

ஜாடியை எடுத்த நபர் தயவு செய்து அதனை தங்களிடம் திருப்பி கொடுத்து விடுங்கள். ஜாடி எடுக்கப்பட்டதை எண்ணி எங்களது தந்தை மிகவும் வேதனையில் உள்ளதாக’ இருவரும் உருக்கமுடன் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்