தீப்பிழம்புகளுடன் பூமியில் விழுந்த விண்கல்

Report Print Arbin Arbin in கனடா
0Shares
0Shares
lankasri.com

கனடாவில் வானத்தில் இருந்து விண்கல் ஒன்று பூமியில் விழும் காட்சி சிசிடிவி கமெராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த 4ம் திகதியன்று இரவு வானத்தில் இருந்து விண்கல் ஒன்று பூமியில் விழுந்துள்ளது.

இந்த காட்சிகள் அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கமெராவில் பதிவாகியுள்ளது.

உள்ளூர் நேரப்படி இரவு 10 மணியளவில் தீப்பிழம்புகளுடன் அந்த விண்கல் கீழே விழுந்தது.

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அந்நாட்டு தீயணைப்பு அதிகாரி ஒருவர், விண்கல் குறித்த செய்தியை உறுதி செய்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்