புயலில் இருந்து பயணிகளை பாதுகாக்க கனடாவின் 10 விமானங்கள் தீவிர பணியில்

Report Print Gokulan Gokulan in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

டொமினிக்கா குடியரசு ,டுர்க்ஸ், கைகோஸ் போன்ற இடங்களில் புயல் அடிப்பதற்கு முன்னர் பயணிகளை ஏற்றிவருவதில் கனடாவின் 10 விமானங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

மொண்ட்ரியல் நகரில் இருந்து இயங்கும் எயர் டிரன்சட் நிறுவனமும் , கல்கரியில் இருந்து செயற்படும் வெஸ்ட்ஜெட் ஆகிய இரண்டு விமான நிறுவனங்களும் குறி;த்த பணியினை முன்னெடுத்துள்ளது.

இதே சமயம் வெஸ்ட்ஜெட் மூன்று விமானங்களை கரபியன் தீவுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் மேலும் இரண்டு வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இங்குள்ள பயணிகள் அனைவரையும் ஏற்றிவர, போதுமான அளவு விமானங்கள் அனுப்பி வைத்துள்ளதாக கூறுகிறார்கள்.

இதேவேளை டொரோண்டோ விமான நிலையத்திலிருந்து உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணியளவில் ஒரு வெஸ்ட்ஜெட் விமானம் புறப்பட்டுச் சென்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்