கனடாவில் குடியேறி இரட்டை கொலை செய்த இருவர்: இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப உத்தரவு

Report Print Peterson Peterson in கனடா
0Shares
0Shares
lankasri.com
advertisement

கனடாவில் குடியேறிய பின்னர் இந்தியாவில் இரட்டை கொலை செய்த இருவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் இருவரையும் இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப கனடா உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த Surjit Singh Badesha(72) மற்றும் அவரது உறவினரான Malkit Kaur Sidhu(67) ஆகிய இருவரும் 2000-ம் ஆண்டுக்கு முன்னதாகவே கனடாவில் குடியேறியுள்ளனர்.

advertisement

கனடா செல்வதற்கு முன்னதாக Malkit Kaur Sidhu என்ற அப்பெண்ணிற்கு Jassi Sidhu என்ற மகள் இருந்துள்ளார்.

தனது தாயாருக்கு தெரியாமல் கடந்த 2000-ம் ஆண்டில் ஜெசி சிது ஒருவரை ரகசிய திருமணம் செய்துள்ளார். இதற்கு தாயார் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கனடாவில் தங்கியிருந்த தாயார் தனது உறவினரான சுர்ஜித் சிங்குடன் சேர்ந்து மகளை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, பஞ்சாப்பில் ஒரு கும்பலை ஏற்பாடு செய்து அவர்கள் மூலம் தனது மகளை கொலை செய்துள்ளார். இக்கொலையை நிகழ்த்தும்போது தடுக்க வந்த தனது சிதுவின் கணவரும் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த இரட்டை கொலையை செய்வதற்கு இருவரும் இந்தியாவிற்கு 10,000 டொலர் பணம் அனுப்பியுள்ளனர்.

இரட்டை கொலை வழக்கு தொடர்பான இந்திய அதிகாரிகளின் விசாரணையில் கனடாவில் உள்ள தாயாரும் அவரது உறவினரும் முதல் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து இருவருக்கும் இந்திய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

ஆனால், இத்தீர்ப்பினை ஏற்றுக்கொள்ளாத இருவரும் கனடாவை விட்டு வெளியேற மறுப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இவ்வழக்கு விசாரணை கனேடிய உச்ச நீதிமன்றத்திற்கு நேற்று வந்தபோது இருவரையும் இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்