பொது நிகழ்ச்சியில் முதல்முறையாக காதலியுடன் கலந்து கொள்ளும் இளவரசர் ஹரி

Report Print Raju Raju in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

கனடாவில் நடைபெறவிருக்கும் Invictus விளையாட்டு நிகழ்ச்சியில் இளவரசர் ஹரியும், மேகனும் ஒன்றாக கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய இளவரசர் ஹரியும், அமெரிக்க நடிகை மேகனும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வருகிறார்கள்.

தங்கள் காதல் குறித்து வெளிப்படையாக அவர்கள் இதுவரை கூறாத நிலையில், சமீபத்தில் Vanity Fair என்ற பத்திரிகைக்கு பேட்டியளித்த மேகன், நானும், ஹரியும் காதலிக்கிறோம் என முதல்முறையாக தெரிவித்தார்.

மேகன் தனது பிறந்தநாளை ஹரியுடன் ஆப்பிரிக்காவுக்கு சென்று கொண்டாடினார். ஆனால் தற்போது முதல்முறையாக ஹரியும், மேகனும் பொது நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொள்ளவுள்ளனர்.

கனடாவில் வரும் 23ஆம் திகதி தொடங்கும் Invictus விளையாட்டு நிகழ்ச்சியில் தான் இருவரும் சேர்ந்து பங்கேற்கவுள்ளனர்.

போரில் அடிப்பட்டு தன்னம்பிக்கையோடு உலகெங்கிலும் வாழும் ராணுவ வீரர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி இதுவாகும்.

மேகன் தற்போது Suits என்ற தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்புக்காக கனடாவில் முகாமிட்டுள்ளதால், அப்படியே Invictus நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என தெரிகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்