வாகன விபத்தில் பலியான மகள்: தந்தை மீது வழக்கு பதிவு செய்த பொலிஸ்

Report Print Peterson Peterson in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

கனடா நாட்டில் வாகன விபத்தில் மகள் பலியானதை தொடர்ந்து ஓட்டுனரான தந்தை மீது அந்நாட்டு பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கல்கேரி நகரில் உள்ளக் குடியிருப்பு ஒன்றில் Michael Shaun Bomford(52) என்பவர் தனது Meghan Bomford(17) மகளுடன் வசித்து வந்துள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் திகதி வீட்டிற்கு மகளின் தோழி ஒருவர் வந்துள்ளார்.

மேலும், தந்தை, மகள் மற்றும் அவருடைய தோழி ஆகிய மூவரும் வெளியே செல்ல புறப்பட்டுள்ளனர்.

தந்தை காரை ஓட்ட இருவரும் பின் இருக்கையில் அமர்ந்து சென்றுள்ளனர்.

அப்போது, McKnight Boulevard N.E என்ற பகுதிக்கு சென்றபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

சாலையின் மையத்தில் இருந்த தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதிய கார் பலமுறை சாலையில் உருண்டு சென்றுள்ளது.

கார் மோதிய வேகத்தில் மூவரும் காரில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டனர்.

இவ்விபத்தில் மகள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். தோழிக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காயங்களுடன் உயிர் தப்பிய தந்தையை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது, தந்தையின் அஜாக்கிரதை தனம் மற்றும் அசுர வேகத்தில் காரை ஓட்டியதால் விபத்து நிகழ்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பல மாத விசாரணைக்கு பின்னர் நேற்று தந்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

எதிர்வரும் அக்டோபர் 5-ம் திகதி அவர் நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பப்படுவார் என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்