இர்மா சூறாவளிக்குள் சிக்கி தவிக்கும் சக மாணவர்களிற்கு உதவ ஒட்டாவாவை வலியுறுத்தும் மருத்துவ மாணவர்கள்!

Report Print Mohana in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

இர்மா சூறாவளியில் சிக்கியுள்ள கனடிய மாணவன் St. Maarten-ஐ மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது நண்பர்கள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.

கல்கரியை சேர்ந்த டுலானி சமரபுலி-அமெரிக்க பல்கலைக்கழக கரிபியன் பாடசாலையில் தனது முதல் ஆண்டை அண்மையில் முடித்துள்ளார்.

பாடசாலையில் இருந்து பேரழிவுகரமான புயல் தாக்க முன்னர் செவ்வாய்கிழமை காலை புறப்பட்ட கடைசி விமானம் ஒன்றை பிடித்து கொள்ள முடிந்த ஐந்து கனடிய மாணவர்களில் ஒருவராவார்.

26-வயதுடைய இவரும் மற்றய நான்கு மாணவர்களும் கடைசி நிமிடத்தில் விமான நிலையம் சென்று ரொறொன்ரோ புறப்படும் விமானத்தை பிடிக்க நினைத்து புறப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

சன்விங் விமானம் நிறைந்து விட்ட நிலையில் விமானம் புறப்பட முன்னர் பயணிகள் எவரும் வராவிடின் சந்தர்ப்பம் கிடைக்கலாம் என இவர்களை காத்திருக்கும் வண்ணம் விமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அதிஷ்ட வசமாக இவர்களிற்கு விமானத்தில் இடம்கிடைத்து ரொறொன்ரோ வந்தடைந்து விட்டனர்.

புதன்கிழமை காலை தீவு நேரடியாக கொடிய புயலினால் தாக்கப்பட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் விமான நிலையத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள முயன்றுள்ளனர்.

பாதுகாப்பாக வீடு வந்து சேர்ந்த சமரபுலியும் அதே பாடசாலையை சேர்ந்த கிட்டத்தட்ட 25 கனடிய மாணவர்களும் இணைந்து கரிபியனில் அகப்பட்டுக்கொண்ட மாணவர்கள் கனடா வந்து சேர்வதற்கான முயற்சியில் ஈடு பட்டுள்ளனர்.

ஆன்லைனில் மனு ஒன்றை உருவாக்கி 500-ற்கும் மேற்பட்ட கையொப்பங்களையும் பெற்றுள்ளனர். இதனை கனடிய அரசாங்கத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர்.

கனடிய மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இன்மை போன்ற இன்னல்களிலிருந்து அவர்களை பாதுகாக்க கனடிய அரசாங்கம் முயலும் என நம்புவதாக தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க மாணவர்கள் தீவிலிருந்து யு.எஸ். இராணுவத்தால் வெளியேற்றப்பட்டு விட்டனர். கனடாவும் அவ்வாறு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்