ஒன்ராறியோவில் இந்த வருடம் 185,000 கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களிற்கு இலவச பயிற்சி!

Report Print Mohana in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

ரொறொன்ரோ-இந்த வருடம் ஒன்ராறியோவில் இலவச ரியுசன் பெற்ற கல்லூரி-படிப்பு மாணவர்களின் எண்ணிக்கை 185,000 என ஒன்ராறியோவின் இரண்டாம் நிலை கல்விக்கு பொறுப்பான அமைச்சர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் புதிய திட்டமொன்றின் கீழ் இந்த இலவச நிதிஉதவி வழங்கப்பட்டுள்ளது.

மேம்பட்ட கல்வி அமைச்சர் டெப் மத்தியு இந்த ரியுசன் தொகையை இன்று அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொகை ஒன்ராறியோவின் முழு-நேர கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் தொகையை விட மூன்றில் ஒரு பங்கு மேலானதெனவும் கூறப்படுகின்றது.

கடந்த வருட வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட புதிய ஒன்ராறியோ மாணவர் உதவி திட்டம் இந்த வருட பாடசாலை ஆண்டில் மானியங்களும் கடன்களும் இணைந்ததாக அமையும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

உதாரணமாக உயர்தர பாடசாலையில் இருந்து நேரடியாக பல்கலை கழகம் செல்லும் மாணவன் ஒருவன் அவனது பெற்றோர்களின் வருமானம் $70,000 ஆயின் $7,300 ஐ மானியமாக பெறுவான். இத்தொகை சராசரி ரியுசன் செலவையும் $8,300 திரும்ப செலுத்தும் கடனையும் ஈடு செய்யும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று சதவிகித ரியுசன் அதிகரிப்பு தொடரும் ஆனால் இந்த மானியம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தினருக்கு பிந்திய இரண்டாம் நிலை கல்வியை தொடர கூடியதாக அமையும்.

இந்த இலவச பயிற்சி வழக்கமான கல்லூரி டிப்ளோமா திட்டம் அல்லது இளங்கலை கலைகள் அல்லது பல்கலைக்கழக அறிவியல் திட்டம் அல்லது சராசரி பொறியியல் துறை போன்ற உயர்-கட்டண திட்டங்களின் சராசரி ரியுசன் ஆகியனவற்றின் உண்மையான செலவாக அமையும் என அதிகாரிகள் வரையறுக்கின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்