உலகின் மிகப்பெரிய வைரம்: விலை எவ்வளவு தெரியுமா?

Report Print Deepthi Deepthi in கனடா
306Shares
306Shares
Seylon Bank Promotion

உலகின் இரண்டாவது மிகப்பெரிய வைரம் 53 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

கனடாவை சேர்ந்த Lucara என்ற நிறுவனம் இதனை அறிவித்துள்ளது, இந்த வைரமானது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் Botswana சுரங்கப்பாதையில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வைரத்தின் பெயர் Lesedi La Rona. இது Botswana's Tswana மொழி ஆகும். அதாவது நமது ஒளி என அழைக்கின்றனர். பார்ப்பதற்கு ஒரு பந்து போன்று இருக்கும் இந்த வைரத்தின் எடை 1,109-carat ஆகும்.

இந்த வைரத்தினை இங்கிலாந்தை சேர்ந்த Graff Diamonds என்ற நிறுவனம், இதனை 53 மில்லியன் டொலருக்கு எடுத்துள்ளது.

இதுகுறித்து இந்த நிறுவனத்தின் அதிகாரி கூறியதாவது, பழமையான இந்த வைரத்தினை பாதுகாப்பான முறையில் வெட்டி பட்டை தீட்டப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்