சுற்றுலா செல்லும் கனேடியர்கள் தொடர்ச்சியாக சுட்டுக்கொலை

Report Print Peterson Peterson in கனடா
197Shares
197Shares
lankasrimarket.com

மத்திய அமெரிக்காவிற்கு சுற்றுலா செல்லும் கனடா நாட்டினர் தொடர்ச்சியாக மர்மமான முறையில் சுட்டுக்கொல்லப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரொறன்ரோ நகரை சேர்ந்த Gabriel Bochnia(38) என்பவர் தனது மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன் பெல்லிஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

Chula Vista நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்தபோது அந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சிக்காக வீட்டை விட்டு வெளியே சென்றபோது மர்ம நபர் ஒருவர் கேப்ரியலை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

துப்பாக்கி சத்தம் கேட்டு அலறியடித்து ஓடிவந்த கேப்ரியலின் மனைவியையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு மர்ம நபர் தப்பியுள்ளார்.

இச்சம்பவத்தில் கேப்ரியல் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பலியாகியுள்ளார். அவரது மனைவி தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 52 வயதான கனேடிய பெண் ஒருவர் அமெரிக்க நண்பருடன் இதே நகரில் தங்கியபோது இருவரும் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர்.

இரு உடல்களையும் தீயிட்டு எரிக்கும் நிலையில் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

எனினும், இச்சம்பவத்திற்கு பின்னணியில் உள்ளவர்கள் இதுவரை பொலிசாரால் கைது செய்யப்படவில்லை.

பெல்லிஸ் நாட்டிற்கு சுற்றுலா செல்லும் கனேடியர்கள் தொடர்ச்சியாக மர்மமான முறையில் கொல்லப்படுவது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்