இரண்டாயிரம் கனேடியர்கள் கருணைக் கொலை!

Report Print Thayalan Thayalan in கனடா
இரண்டாயிரம் கனேடியர்கள் கருணைக் கொலை!
199Shares
199Shares
lankasrimarket.com

கடந்த ஓராண்டில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கனேடியர்கள் வைத்தியர்களின் உதவியுடன் சட்டபூர்வமாக தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் புற்றுநோயால் அவதிபட்டு வருபவர்களே இவ்வாறு உயிரிழப்பதாகக் கனேடிய சுகாதார நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது.

வைத்தியர்களின் உதவியுடன் உயிரை மாய்த்துக் கொள்ளும் நடவடிக்கை கடந்த 2016ஆம் ஆண்டு சட்டபூர்வமாக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இதுவரை ஆயிரத்து 982 மருத்துவ ரீதியான உயிரிழப்புகள் சம்பவித்துள்ளன.

இந்நடவடிக்கை சட்டபூர்வமாக்கப்படுவதற்கு முன்னர் கியூபெக்கில் கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பரில் 167 உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்