பொலிஸ் துரத்தியதால் நிகழ்ந்த விபத்து: பரிதாபமாக பலியான காதல் ஜோடி

Report Print Peterson Peterson in கனடா
206Shares
206Shares
lankasrimarket.com

கனடா நாட்டில் பொலிஸ் துரத்தியபோது நிற்காமல் சென்ற கார் நிகழ்த்திய விபத்தில் காதலர்கள் இருவர் பரிதாபமாக உடல் நசுங்கி பலியாகியுள்ளனர்.

ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Hamilton நகரில் தான் இக்கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் சந்தேகத்திற்குரிய கார் ஒன்று வேகமாக செல்வதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலை பெற்ற பொலிசார் குறிப்பிட்ட சாலையில் நின்றிருந்தபோது அந்த கார் கடந்து சென்றுள்ளது.

காரை நிறுத்துமாறு பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், கார் நிற்காமல் அசுர வேகத்தில் பறந்துள்ளது.

சந்தேகம் வலுவடைந்த பொலிசார் அந்த காரை துரத்திக்கொண்டு சென்றுள்ளனர்.

சுமார் 20 நிமிடங்கள் பொலிசார் அந்த காரை பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.

துரதிஷ்டவசமாக, கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த லொறி மீது பயங்கரமாக மோதியுள்ளது.

இவ்விபத்தில் 15 வயதான வாலிபர் மற்றும் அவருடைய காதலி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகியுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் தகவல்களை வெளியிட பொலிசார் மறுத்துவிட்டனர்.

எனினும், இவ்விபத்திற்கு உண்மையான காரணம் கோரி வாலிபரின் பெற்றோர் பொலிசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்