பாதிக்கப்பட்ட கனேடிய பழங்குடியினருக்கு நட்டஈடு

Report Print Thayalan Thayalan in கனடா
பாதிக்கப்பட்ட கனேடிய பழங்குடியினருக்கு நட்டஈடு
0Shares
0Shares
Cineulagam.com

‘சிக்ஸ்டீஸ் ஸ்கூப்’ என அழைக்கப்படும் பாதிக்கப்பட்ட பழங்குடியினர் பிரச்சினைக்கு கனடா தீர்வை எட்டியுள்ளது.

அதன்படி, பாதிக்கப்பட்ட சுமார் 20 ஆயிரம் பேருக்கு 800 மில்லியன் கனேடிய டொலர் நிதியை நட்டஈடாக வழங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

1960ஆம் ஆண்டு காலப்பகுதியில் குழந்தை நல அமைப்புகள் கனடாவிலுள்ள பழங்குடி மக்களின் குடும்பங்களில் பிறந்த குழந்தைகளை, அங்கிருந்து பிரித்து தத்தெடுப்புக்காக வழங்கி வந்தது. கனடாவில் இந்த நடைமுறை பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்தது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கும் இந்த நடவடிக்கையானது இருண்ட, வேதனைக்குரிய அத்தியாயத்தை சரிப்படுத்த இன்றியமையாததாகும் என பழங்குடி உறவுகள் அமைச்சர் கரோலின் பென்னெட் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்