கனடா-சஸ்கற்சுவான் மாகாணத்தில் ஏரிக்கரை பக்க பயணம் மேற்கொண்ட குடும்பத்தினரின் பயணம் பாரியதொரு கண்டுபிடிப்புடன் முடிவடைந்துள்ளது.
இவர்கள் கண்டுபிடித்தது 75வருடங்கள் பழமை வாய்ந்த ஒரு புதை பொருள் என படிம வல்லுநர் தெரிவித்துள்ளார்.
ஜொன் கான்ஸ்ஹொன் லேக் டீவென்பேக்கரிற்கு அருகாமையில் உள்ள இவர்களது குடும்ப கபினிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.
அங்கு பெரிய பாறைகளில் ஒன்று வெடித்துள்ளது. அங்கு வித்தியாசமான அழகான புதை பொருள் ஒன்றை கண்டுள்ளனர்.
இதனை படமெடுத்த ஜொன் அவற்றை சஸ்கற்சுவான் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். ஒரு வாரத்தின் பின்னர் இது குறிப்பிடத்தக்க ஒன்றென பதில் வந்தது.
நீர் வாழ் உயிரினம்- ஒரு வரலாற்றிற்கு முந்திய பற்றிழை உடனான சுழல் ஓடு கொண்ட கணவாய் இனம் என கூறப்பட்டது.
சிறுவர்கள் கண்டுபிடிப்பொன்றில் ஈடுபட்டமை குறித்து மகிழ்ச்சியடைந்தனர்.