15 வயது சிறுவன் கார் ஓட்டியதால் நிகழ்ந்த விபத்து: இருவர் பலி

Report Print Peterson Peterson in கனடா
0Shares
0Shares
lankasri.com

கனடா நாட்டில் 15 வயது சிறுவன் கார் ஓட்டி நிகழ்த்திய விபத்தில் அவனுடைய நண்பர்கள் இருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாண்டீரியல் நகருக்கு அருகில் வசித்து வரும் 15 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோரின் காரை எடுத்துக்கொண்டு நேற்று வெளியே புறப்பட்டுள்ளான்.

வழியில் தனது நண்பர்களை ஏற்றிக்கொண்டு அதிவேகத்தில் சாலையில் பறந்துள்ளான்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சுவற்றின் மீது மோதி குட்டிக்கரணம் அடித்துள்ளது.

கார் மோதிய வேகத்தில் அப்பளம் போல் நொருங்கியுள்ளது. மீட்புக்குழுவினர் காரை உடைத்து உள்ளே இருந்தவர்களை வெளியே கொண்டு வந்துள்ளனர்.

இவ்விபத்தில் காரில் பயணம் செய்த சிறுவனின் நண்பர்களான 17 மற்றும் 14 வயதுடைய நபர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மேலும், 13 மற்றும் 16 வயதுடைய சிறுவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரை ஓட்டிய 15 வயது சிறுவன் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளான்.

இவ்விபத்து தொடர்பாக பொலிசார் சிறுவனின் நண்பர்களுடன் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது, சிறுவன் அடிக்கடி தனது பெற்றோரின் காரை எடுத்துக்கொண்டு சாலையில் அதிவேகமாக பயணிப்பதை பார்த்துள்ளேன்.

அதிவேகமாக காரை ஓட்டியதால் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இருவரின் உயிரை பறித்த விபத்து தொடர்பாக சிறுவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்