சர்வதேச நாணய நிதியத்தின் கனடா குறித்த மதிப்பீடு!

Report Print Mohana in கனடா
58Shares
58Shares
Promotion

ரொறொன்ரோ-கனடாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு இந்தவருடம் மற்றும் 2018ல் உச்சத்தில் அல்லது அதற்கு அருகாமையில் இருக்குமென சர்வதேச நாணய மதிப்பீடு கணித்துள்ளது.

வாசிங்கடனை மையமாக கொண்ட IMF, 2017 கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.0சதவிகிதமெனவும்---யூலை மாத கணிப்பை விட அரை சதவிகிதம் அதிகரித்துள்ளதெனவும் தெரவிக்கின்றது.

இந்த அதிகரிப்பினால் கனடா மற்றய G7-விட {ஏழு நாடுகளின் குழு} முன்னணியில் நிற்கின்றது. அமெரிக்க 2.2சதவிகித வளர்ச்சியுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

பரிசை மையமாக கொண்ட OECD-பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பு- கூட இந்த வருடம் G7-நாடுகளில் கனடா முன்னணியில் நிற்கின்றதென தெரிவித்துள்ளது. இந்த கணிப்புகளின் மூலம் கனடாவின் வளர்ச்சி முன்னேற்றம் பிரதிபலிக்கின்றதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்