வர்த்தக பிரச்சினைகளுக்கு மத்தியில் பிரதமர் ஜஸ்டின் அமெரிக்காவுக்கு விஜயம்

Report Print Thayalan Thayalan in கனடா
68Shares
68Shares
lankasrimarket.com

நான்கு நாள் விஜயமாக அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கு செல்லும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் பாலின சமத்துவம் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு திட்டமிட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையிலான வர்த்தகத்தில் பல சவால்களை எதிர்கொள்ளும் ட்ரூடோ வர்த்தகம் தொடர்பான விவகாரத்திலேயே அதிக கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகள் சோர்வடைந்துள்ள நிலையில் ட்ரூடோவின் இந்த விஜயம் அமைந்துள்ளது.

அதன்படி வாஷிங்டனில் தரையிறங்கும் பிரதமர் ட்ரூடோ ஃபோர்ச்சூன் இதழின் சக்திவாய்ந்த பெண்கள் மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து செல்வாக்குமிக்க சட்டமியற்றுபவர்களுடன் வர்த்தக சந்திப்பை நடத்தவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி ட்ரம்ப்புடனும் சந்திப்பை நடத்தவுள்ளார்.

ட்ரம்புடனான சந்திப்பே ட்ரூடோவின் பயணத்தில் எதிர்பார்க்கப்படும் சந்திப்பாக அமையவுள்ளது.

தொடர்ந்து மெக்சிகோ செல்லும் ட்ரூடோ மெக்சிகோ ஜனாதிபதி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்