கனடாவில் அரிதாக காணப்படும் நோய் வெளிப்பாடு

Report Print Mohana in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

எட்மன்டன் ஆரம்ப பள்ளி மாணவர் ஒருவர் தீவிரமான தொற்றுநோய் எனப்படும் தொண்டை அழற்சிநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். கனடாவில் மிக அரிதாக காணப்படும் ஒரு நோய் இதுவாகும்.

பலர் இவருடன் பாடசாலையில் தொடர்பு கொண்டிருந்துள்ளனரென தெரிவிக்க படுகின்றது. இவரது வீட்டில் உள்ளவர்களை பொதுமக்களை விட்டு விலகி இருக்குமாறும் நோய்க்கான அறிகுறிகள் தென்படுகின்றனவா என கவனிக்குமாறும் கேட்டு கொள்ளப்படுகின்றனர்.

எட்மன்டன் பகுதியில் கடந்த 10வருடங்களாக இந்நோய் காணப்படவில்லை என கூறப்படுகின்றது.

இந்நோய் பக்டீரியாவினால் ஏற்படுவதென தெரிவித்த கனடா சுகாதார ஏஜன்சி இந்நோய்க்கான தடுப்பூசி போடாதவர்கள் நோய் தொற்றும் அபாயம் கொண்டிருப்பர் என தெரிவித்துள்ளது.

மிக அபாயகரமான இந்நோயினால் கனடாவில் ஐந்து வயதிற்குட்பட்ட சிறுவர்கள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொண்டை வலி, காய்ச்சல் மற்றும் குளிர் நடுக்கம் போன்றன நோய்க்கான அறிகுறிகளாகும். நோயினால் கழுத்து விரைவாக வீங்கி நோயாளியின் சுவாச வழியை தடைசெய்யும்.

தோல் தொற்று நோயையும் ஏற்படுத்தக்கூடியது.

முதலும் முக்கியமானதுமாக எட்மன்டன் சம்பவம் தடுப்பூசியை அனைத்து கனடிய பெற்றோர்களிற்கும் நினைவு படுத்துகின்றது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்