பாடசாலையில் மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியர் மீது வழக்கு பதிவு

Report Print Peterson Peterson in கனடா
0Shares
0Shares
lankasri.com

கனடாவில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவிகளிடம் அத்துமீறி பாலியல் தாக்குதல் நடத்திய ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Oakville நகரில் Tiger Jeet Singh Public School என்ற பள்ளி இயங்கி வருகிறது.

இப்பள்ளியில் சமீபத்தில் பட்டம் பெற்ற Hazem Kabbara(37) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், வகுப்புகள் நடைபெற்றபோது இரண்டு மாணவிகளிடம் அத்துமீறி ஆசிரியர் ஆபாசமாக நடந்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

இவ்விவகாரம் வெளியானதை தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.

புகார் குறித்து விசாரணை செய்த பள்ளி நிர்வாகம் பொலிசாரிடம் தகவல் அளித்துள்ளனர்.

தகவலை பெற்ற பொலிசார் மாணவிகளிடம் முறைப்படி விசாரணை மேற்கொண்ட பின்னர் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் தற்போது பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மேலும், நீதிமன்றதில் அவர் மீதான வழக்கு முடிவடையும் வரை நிர்வாகத்திற்கு சொந்தமான எந்த பள்ளியிலும் அவர் பணிபுரிய தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் மீதான வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இப்புகார்கள் குறித்து கூடுதல் தகவல் அறிந்தவர்கள் பொலிசாரை தொடர்புக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்