அல்பெர்ட்டாவில் 2 பயணிகளுடன் மாயமான விமானம்

Report Print Deepthi Deepthi in கனடா
27Shares
27Shares
lankasrimarket.com

அல்பெர்ட்டா மாகாணத்தில் 2 பேருடன் பயணித்த சிறிய ரக விமானம் மாயமாகியுள்ளது என விக்டோரியா கூட்டு மீட்பு ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.

Penticton- இல் இருந்து பகல் 2.30 மணியளவில் புறப்பட்ட விமானம், 10.04 மணியளவில் தனது பாதையில் இருந்து மாயமானது.

Revelstoke நகரில் இருந்து சுமார் 20 கிலோ மீற்றர் தொலைவில் கடைசியாக விமானியின் மொபைல் சிக்னல் கிடைத்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேடல் மற்றும் மீட்பு குழுக்கள் சனிக்கிழமை இரவு விமானத்தைத் தேடி, Revelstoke மற்றும் Rogers Pass ஆகிய இடங்களுக்கிடையேயான சென்றது, ஆனால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஞாயிறு காலை அப்பகுதியில் ஏற்பட்ட மோசமான வானிலையால் தேடுதல் முயற்சிகள் தடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் விமானத்தை விரைவில் கண்டுபிடிப்போம் என தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்