கனடாவில் தொழில் புரிவோருக்கு மகிழ்ச்சியான செய்தி

Report Print Thayalan Thayalan in கனடா
272Shares
272Shares
lankasrimarket.com

கனடா – ஒன்ராறியோவில் மணித்தியாலயத்திற்கான அடிப்படை ஊதியத்தினை 15 டொலர்களாக அதிகரிக்க தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பிலான சட்டத்திருத்தம் ஒன்று ஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதுவரையிலும் மணித்தியாலயத்தின் அடிப்படை ஊதியமாக 11.60 டொலர்களே காணப்பட்டு வந்துள்ளது. இதனை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 14 டொலர்களாக அதிகரிக்க தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேபோன்று 2019ஆம் ஆண்டு முதல் அந்தத் தொகையினை 15 டொலர்களாக அதிகரிக்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, குறித்த ஊதிய அதிகரிப்பானது தொழில் வழங்குனர்களின் மத்தியில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்