கனடாவில் ஒரு வகை நோய் கிருமி வெளிப்பாட்டினால் ஒன்பது பேர்கள் மரணம்!

Report Print Mohana in கனடா
0Shares
0Shares
lankasri.com

லண்டன், ஒன்ராறியோவில் streptococcus outbreak எனப்படும் நோய்பரப்பும் பக்டீரியாவின் வெளிப்பாட்டினால் ஒன்பது பேர்கள் வரை மரணமடைந்துள்ளனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வெளிப்பாடு 18மாதங்களிற்கு முன்னர் அறிவிக்க பட்டிருந்ததாகவும் 2016 ஏப்ரல் 1லிருந்து 132ற்கு மேற்பட்ட தொற்றுக்கள்; அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் மிடில்செக்ஸ்- லண்டன் சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது.

22-சதவிகிதம் வரை தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்ததாகவும் 15சதவிகிதம் ளுவசநிவழஉழஉஉயட நச்சு அதிர்ச்சி நோய்க்குறிகள் காணப்பட்டதாகவும் அத்துடன் 15சதவிகிதம் சதை-உண்ணும் நோய் கண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்க பட்டவர்களிடமிருந்து இந்த பக்டீரியாக்கள் நேரடியாக மூக்கு மற்றும் தொண்டை சுரப்பிகள் மூலம் பரவக்கூடியவை எனவும் மற்றும் பாதிக்கப்பட்ட புண்கள் அல்லது தோலில் உள்ள புண்களிலிருந்தும் பரவக்கூடியவை.

இந்த தொற்று வருடம் பூராகவும் இடம்பெற கூடியதெனவும் இதன் எண்ணிக்கை குளிர் காலத்தில் அதிகரிக்கும் எனவும் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் பாதிப்பு சாதாரணமானதாக இருக்கலாம் ஆனால் சில சமயங்களில் மிக கடுமையானதாக உயிராபத்தானவையாக தசைகள் இரத்தம் மற்றும் பிற உறுப்புகளிற்குள்ளும் செல்ல கூடியதாகவும் இருக்கும் என கூறப்படுகின்றது.

வழக்கமான கைகளை கழுவுதல், இருமும் போதும் மற்றும் தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை மூடுதல், போதை பொருட்களை பகிருதல் குடிபானங்கள் உணவுகளை பகிர்தல் போன்றனவற்றை தவிர்ப்பதால் தொற்றை குறைக்கலாம் என அறிவுறுத்தப்படுகின்றது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்