மதுவிடுதியிலிருந்து காணாமல் போன இளம்பெண் என்னவானார்?

Report Print Raju Raju in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

மதுவிடுதியிலிருந்து இளம்பெண் காணாமல் போன நிலையில் ஏரியில் அவர் மூழ்கியிருக்கலாம் என்ற அடிப்படையில் பொலிசார் தேடி வருகிறார்கள்.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த இளம் பெண்ணான அலிசன் ராஸ்பா (25) கனடாவின் விஸ்ட்லர் நகரில் தங்கி அங்குள்ள ஹொட்டலில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை அங்குள்ள மதுவிடுதிக்கு சென்ற ராஸ்பா பின்னர் தனது வீட்டுக்கு திரும்பவில்லை.

இதையடுத்து அடுத்தநாள் அவர் பணிக்கு வராததால் இதுகுறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்டது.

பொலிசார் நடத்திய தேடுதல் வேட்டையில் நகரில் உள்ள ஆல்பா ஏரி பூங்காவில் ராஸ்பாவின் பொருள் ஒன்று கிடைத்துள்ளது.

இதை வைத்து அருகில் உள்ள ஆல்பா ஏரியில் ராஸ்பா விழுந்திருக்கலாம் என்ற அடிப்படையில் வீரர்கள் தண்ணீரில் இறங்கி தேடி வருகிறார்கள்.

ஆனாலும் அவர் குறித்து எந்த தகவலும் இன்னும் தெரியவில்லை. மதுவிடுதியிலிருந்து வெளியேறிய ராஸ்பா குறித்து யாருக்காவது தெரிந்தால் தங்களிடம் வந்து கூறலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்