அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல் மத்தியில் நீந்தி சாதனை படைத்த கனடியர்

Report Print Kabilan in கனடா
110Shares
110Shares
lankasrimarket.com

மது நாகராஜா என்னும் கனடியர், அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களுக்கு இடையே நீந்தி சாதனைப் படைத்துள்ளார்.

Ontario-வில் மென்பொருள் மேம்பாட்டாளராக பணிபுரிபவர் 47 வயதான மது நாகராஜா. இவர் கடந்த நவம்பர் 29ஆம் திகதி, தென் அமெரிக்காவின் முனைப் பகுதியில் சுமார் 3.9 கிலோ மீட்டர் தூரம் நீந்தி கடந்துள்ளார்.

இதன் மூலமாக Magellan பகுதியில் வெற்றிகரமாக நீந்திக் கடந்த முதல் கனடியர் என்ற சாதனையையும், உலக அளவில் 23வது நபர் என்னும் சாதனையையும் மது நாகராஜா படைத்துள்ளார்.

இந்த சாதனை குறித்து நாகராஜா கூறுகையில், ‘கனடாவின் 150-வது பிறந்த நாள் இந்த ஆண்டு ஆகும். அதற்காக எனது பரிசாக இந்த சாதனையை செய்ய நினைத்தேன்.

தனித்துவமான புவியியல் அமைப்பு பல ஊக்கங்களைத் தருகிறது. அதன் மூலமாகவே, 4 செல்சியஸ் குளிர்ந்த நீரில், மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடிய காற்றை எதிர்த்து என்னால் நீந்த முடிந்தது.

இரண்டு மீட்டர் உயரத்திற்கு எழும்பிய அலைகளை எதிர்த்து நீந்தியது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இது கடினமாக இருந்தாலும், சாகசமாக நினைத்து செய்ததால் என்னால் சாதிக்க முடிந்தது.

இதே நாளில், அமெரிக்காவின் Michelle Macy என்பவரும் இதே போல நீந்தியுள்ளார்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘கடைசியாக நான் சந்தித்த தோல்வியே, தற்போது ஒரு மணிநேரம் 19 நிமிடங்களில் நீந்தி சாதனை படைக்க உந்துதலாக இருந்ததது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்