15 வயது சிறுமியுடன் தவறான உரையாடல்: அமெரிக்க சென்ற கனடிய நபருக்கு சிறை

Report Print Deepthi Deepthi in கனடா
0Shares
0Shares
lankasri.com

இளம் வயது சிறுமியுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வதற்காக அமெரிக்கா சென்ற கனடிய நபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை பூர்விமாக கொண்ட தில்பாக் சிங்(57) கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் வசித்து வந்துள்ளார்.

இவர் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஓன் லைன் வழியாக 15 வயது சிறுமி ஒருவரிடம் உரையாடியுள்ளார். ஜனவரி மாதம் தொடங்கிய இந்த உரையாடல் மே மாதம் வரை தொடர்ந்துள்ளார்.

இந்த உரையாடலில் சிறுமியுடன் மிகவும் நெருக்கமான நபர், நான் உன்னுடன் உறவு வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன் என கூறியுள்ளார். அதனைத்தொடர்ந்து அமெரிக்காவின் அரிசோனா மகாணத்தில் வசித்து வரும் சிறுமியை பார்ப்பதற்காக மே மாதம் சென்றுள்ளார்.

அமெரிக்காவில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வந்த நிலையில் அதனை எதிர்கொள்ள அந்நாட்டின் நீதி துறை கடந்த 2006ம் ஆண்டு மே மாதத்தில் புராஜக்ட் சேஃப் சைல்ட்ஹுட் என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில், அமெரிக்கா சென்ற தில்பாக் சிங் அங்கு வைத்து கைதுசெய்யப்பட்டது, அவர் மீது இந்த திட்டத்திதன் மீது வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணையில், 46 மாதங்கள் சிறைதண்டனை விதித்து அரிசோனாவின் Federal Court உத்தரவிட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்