கனடாவில் நபரை கார் ஏற்றி கொன்றவர் கைது

Report Print Raju Raju in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

கனடாவில் நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்த நபர் மீது கார் மோதி அவர் உயிரிழந்த நிலையில் இது சம்மந்தமாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டின் ஒன்றாறியோ மாகாணத்தில் உள்ள பிராம்டன் நகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

கலிடான் நகரை சேர்ந்த 34 வயதான நபர் ஞாயிறு அன்று அந்நாட்டு நேரப்படி அதிகாலை 1.30 மணிக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக அவ்தார் தம்மி (38) என்பவர் காரில் வேகமாக வந்த நிலையில் சாலையில் நடந்து சென்றவர் மீது மோதியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து தம்மியை பொலிசார் கைது செய்து அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்