ரொறொன்ரோவில் 2018-ன் முதல் குழந்தை

Report Print Mohana in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

ரொறொன்ரோவின் இரு வைத்தியசாலைகளில் 2018-ன் முதல் குழந்தைகள் பிறந்துள்ளதாக வைத்தியசாலைகள் தெரிவித்துள்ளன.

நடு இரவு இக்குழந்தைகள் பிறந்துள்ளன.

ரொறொன்ரோ சென்.மைக்கல் வைத்தியசாலை மற்றும்ஹம்பர் றிவர் வைத்தியசாலை இரண்டும் ஜனவரி 1ந்திகதி சரியாக 12மணிக்கு புதிய குழந்தைகளை வரவேற்றுள்ளன.

7-இறாத்தல்கள் 11அவுன்ஸ் பெண்குழந்தை நேத்தன் பிலிப்ஸ் சதுக்கத்தில் வான வேடிக்கைகள் இடம்பெற்று கொண்டிருக்கையில் பிறந்ததென சென்.மைக்கல் தெரிவித்துள்ளது.

ஹம்ப றிவர் வைத்தியசாலையில் குழந்தை பிலிப் நடு இரவு பிறந்ததாகவும் தொடர்ந்து அவனது இரட்டை சகோதரி விக்டோரியா ஏழு விநாடிகள் கழித்து பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கியுபெக்கில் நடு இரவிற்கு இரு விநாடிகளிற்கு பின்னர் பெண்குழந்தை பிறந்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா சரேயில் பெண்குழந்தை பிறந்துள்ளது.

புதிய சேய்களும் தாய்மார்களும் நலமே இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்