கனடிய மருத்துவ பல்கலைக்கழகத்தின் மீது வழக்கு தொடரும் மனிதன்

Report Print Mohana in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

ஒன்ராறியோ வெஸ்ரன் பல்கலைக்கழகம் தான் தெரிவு செய்த துறையை சரியான முறையில் வெற்றி அடைய தேவையான கல்வியை தர தவறி விட்டதென மனிதன் ஒருவர் பல்கலைக்கழகத்தின் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட ஐந்து-வருட-முதுகலை பட்ட படிப்பு மருத்துவ பயிற்சியில் சான்றிதழ் பரீட்சையில் சித்தி பெறவும் மருத்துவ நுண்ணுயிரியலாளராக உரிமம் பெறவும் தேவையான பயிற்சியை தரவில்லை என குற்றம் சாட்டியுள்ளார் ஜேம்ஸ் ஸ்ருவட் என்பவர்.

பல்கலைக்கழகத்தின் Schulich பாடசாலையான மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பரிவின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.

குறிப்பிட்ட திட்டம் தகுதி காண் நிலையில் இருந்துள்ளதாகவும் இறுதியில் இவர் தனது படிப்பை முடித்ததும் கைவிடப்பட்டுள்ளதாவும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகின்றது.

இக்குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பல்கலை கழகம் இன்னமும் பாதுகாப்பு அறிக்கை தாக்கல் செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்