உயிரிழந்த கணவன்: மனைவியும் மரணித்த துயர சம்பவம்

Report Print Kabilan in கனடா
0Shares
0Shares
lankasri.com

கனடாவில் கணவனின் இழப்பை தாங்க முடியாத மனைவியும் உயிரிழந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

கனடாவின் Huron County நகரில் 90 வயதான Grant Triebner- 83 வயதான Ada Triebner-வும் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவதினத்தன்று பண்ணைவீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த போது கடும் குளிரின் காரணமாகவும், திடீரென ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாகவும் Grant Triebner இறந்து கிடந்துள்ளார்.

வெகுநேரம் ஆகியும் கணவர் திரும்பி வராததால் சந்தேகமடைந்த Ada Triebner தேடிச் சென்ற போது, கணவரின் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில் அவரும் மரணித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட Huron County பொலிசார், குளிரின் தாக்கத்தினாலேயே இறந்துள்ளார்கள் என்பதை உறுதி செய்துள்ளனர்.

இதுகுறித்து அண்டை வீட்டில் வசிக்கும் Rowe கூறுகையில், 90 வயதிலும் சுறுசுறுப்பாக இயங்க கூடியவர், தினமும் நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார், தம்பதியினர் ஒருவர் மேல் ஒருவர் அளவுகடந்த பாசத்தை கொண்டிருந்ததாக கூறியுள்ளார்.

இவர்களுக்கு இரு மகள்களும், ஏராளமான பேரப்பிள்ளைகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்