கனடாவில் கடும் பனிப்பொழிவு ஏற்படும்: வானிலை மையம் எச்சரிக்கை

Report Print Raju Raju in கனடா
0Shares
0Shares
Cineulagam.com

கனடாவில் திங்கட்கிழமை பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருக்கும் கனடா வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி நாட்டின் தலைநகர் ஒட்டாவாவில் திங்கள் இரவு பனிப்பொழிவு இருக்கும் எனவும், தெற்கு ஒன்றாறியோவில் 10 செண்டிமீட்டர் அளவுக்கு பனியின் தாக்கம் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஞாயிறு மாலை அந்நாட்டு நேரப்படி 7 மணிக்கு வானிலை அறிக்கையானது வெளியிடப்பட்டது.

பனிப்பொழிவின் தாக்கம் கிப்க்ஸ்டன், கோர்ன்வால் மற்றும் கிழக்கு ஒன்றாறியோவை சுற்றியுள்ள பகுதிகளிலும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் திங்கள் காலையிலேயே பனி பொழியலாம் எனவும், –6 டிகிரி செல்சியஸ் அளவில் வெப்பம் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்