கனடாவில் அந்தரத்தில் தொங்கி பரபரப்பை கிளப்பிய பெண்ணுக்கு என்ன தண்டனை?

Report Print Raju Raju in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

கனடாவில் கடந்தாண்டு ராட்சஷ கிரேனில் ஏறி நின்று பரபரப்பை ஏற்படுத்திய பெண் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்பட்டு அபராதம் மட்டும் விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் டொராண்டோ நகரில் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் மரிசா லாசோ (23) என்ற இளம் பெண் அங்கு கட்டிட பணிக்காக பயன்படுத்தப்படும் ராட்சஷ கிரேன் மீது ஏறி உயரமான இடத்துக்கு சென்றார்.

அங்கு மரிசா சில மணிநேரங்கள் இருந்த நிலையில் சம்பவம் குறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்துக்கு பின்னர் மேலே ஏறி அவரை பத்திரமாக மீட்டனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட மரிசா மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

நீதிமன்றத்தில் மரிசா குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நிலையில் தான் செய்த தவறுக்கு அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதையடுத்து அவர் மீதான அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த தகவலை அட்டர்னி ஜெனரல் அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ளார்.

அதே சமயம் ஆறு மாதத்துக்குள் குறிப்பிட்ட அபராத தொகையை செலுத்தவும் மரிசாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்