கனடாவில் சிறுமியின் மீது மதரீதியான தாக்குதல்: பிரதமர் அதிர்ச்சி

Report Print Balamanuvelan in கனடா
0Shares
0Shares
Cineulagam.com

கனடாவில் இஸ்லாமிய மாணவி ஒருவரின் ஹிஜாப்பை மர்ம நபர் ஒருவர் வெட்டி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் Toronto நகரை சேர்ந்த மாணவி Khawlah Noman, தனது தம்பியுடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.

தகவலறிந்து கூடிய செய்தியாளர்களிடம் பேசிய Khawlah, தான் மிகவும் பயந்து போனதாகவும் குழப்பமடைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

பத்திரிகையாளர் ஒருவர், உங்களைத் தாக்கிய நபருக்கு நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்று கேட்டதற்கு “நீங்கள் செய்வது மிகவும் தவறு, நீங்கள் இப்படிச் செய்யக்கூடாது, நான் ஒரு குழந்தை அல்லவா” என்று அவள் பதிலளித்தது காண்போர் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த பிரதமர் Justin Trudeau, மதத்தின் காரணமாக தாக்கப்பட்ட அந்த சிறுமியை எண்ணி தனது இதயம் கலங்குவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்ததோடு, கனடா நாடு இப்படிப்பட்டதுதான் என்று நீங்கள் தவறாக எண்ணி விடக்கூடாது என்று கூறினார்.

இதை ஒரு வெறுப்புக் குற்றமாகப் பதிவு செய்துள்ள பொலிசார், குற்றவாளியை அடையாளம் காண பொது மக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்